2916. |
பெருங்கடல்
நஞ்சமு துண்டுகந் துபெருங் |
|
காட்டிடைத்
திருத்திள மென்முலைத் தேவிபா டந்நட
மாடிப்போய்ப்
பொருந்தலர் தம்புர மூன்றுமெய் துபுன
வாயிலில்
இருந்தவன் தன்கழ லேத்துவார் கட்கிடர்
இல்லையே. 7
|
7.
பொ-ரை: சிவபெருமான், பெரிய பாற்கடலைக் கடைந்த
போது ஏற்பட்ட நஞ்சை உண்டு மகிழ்ந்தவன். சுடுகாட்டில் இளமென்
முலையுடைய உமாதேவி பாட நடனமாடியவன். பகையசுரர்களின்
புரம் மூன்றையும் அம்பு எய்து அழித்தவன். திருப்புனவாயில்
என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள அப்பெருமானின்
திருவடிகளைப் போற்றித் தொழுபவர்கட்கு எவ்விதத் துன்பமும்
இல்லை.
கு-ரை:
பொருந்தலர் - பகைவர். நஞ்சு அமுதுண்டு, நடமாடி,
புரம் எய்து, புனவாயிலில் இருந்தவன் கழல் ஏத்த இடர் இல்லை.
|