2926.
|
பந்தம
ரும்விரன் மங்கைநல் லாளொரு |
|
பாகமா
வெந்தம ரும்பொடிப் பூசவல் லவிகிர்
தன்மிகும்
கொந்தம
ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக்
கோட்டாற்றுள்
அந்தண னைநினைந் தேத்தவல் லார்க்கி்ல்லை
அல்லலே. 6 |
6.
பொ-ரை: சிவபெருமான் பந்துபோன்ற திரட்சியான
விரல்களையுடைய மங்கை நல்லாளாகிய உமாதேவியை
ஒரு பாகமாகக்
கொண்டவன். வெந்து தணிந்த திருநீற்றினைப்
பூசியுள்ள விகிர்தன். மிகுதியாகக் கொத்தாகப் பூக்கும் மலர்கள்
நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கோட்டாறு என்னும் திருத்
தலத்தில் வீற்றிருந்தருள்கின்ற, அனைத்துயிர்களிடத்தும் செவ்விய
அருளுடைய அவனை நினைந்து வழிபடும் அடியவர்கட்கு அல்லல்
சிறிதும் இல்லை.
கு-ரை:
பந்து அமரும் விரல். அமரும் - என்ற சொல்
போலும் என்ற பொருள்தரலால் உவமவாசகம். மாதர் கைவிரல்
நுனியின் திரட்சிக்குப் பந்து உவமை. வெந்து அமரும் - வெந்து
தணிந்த. பொடி - திருநீறு. பொடி பூசவல்ல விகிர்தன் -
மேலானவன்.
|