2929. |
ஓங்கிய
நாரண னான்முக னும்உண |
|
ராவகை
நீங்கிய தீயுரு வாகிநின் றநிம
லன்னிழற்
கோங்கம
ரும்பொழில் சூழ்ந்தெழி லார்திருக்
கோட்டாற்றுள்
ஆங்கம ரும்பெரு மானம ரர்க்கம
ரனன்றே.
9 |
9.
பொ-ரை: செருக்குடைய திருமாலும், பிரமனும் உணரா
வண்ணம் அளந்தறிய முடியாத தீ யுருவாகிநின்ற சிவபெருமான்
இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன். நிழல்தரும் கோங்குமலர்ச்
சோலை சூழ்ந்த அழகிய திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளும் பெருமான். தேவர்கட்கெல்லாம் தேவனாவான்.
கு-ரை:
ஓங்கிய - செருக்கால் மிக்க. நீங்கிய - அளவு
நீங்கிய; அளவு அறியமுடியாத-தீ உரு ஆகி நின்றவன்.
அமரர்க்கமரன் - மகாதேவன். இவை சிவபெருமானுக்கு உரிய
பெயர்.
|