2941. |
முத்தர
வசுரர்கண் மொய்த்த முப்புரம் |
|
அத்தகு
மழலிடை வீட்டி னாரமண்
புத்தரு மறிவொணாப் பூந்த ராய்நகர்க்
கொத்தணி குழலுமை கூறர் காண்மினே. 10
|
10.
பொ-ரை: சிவபெருமான் மூன்று தரத்தினராகிய அசுரர்கள்
மிகுந்த முப்புரங்களை நெருப்பில் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர்.
சமணர்களாலும், புத்தர்களாலும் அறிய ஒண்ணாதவர். திருப்பூந்தராய்
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அவர், பூங்கொத்துக்களால்
அழகுபடுத்தப்பட்ட கூந்தலையுடைய உமாதேவியைத் தம் உடம்பின்
ஒரு கூறாகக் கொண்டவர். அப்பெருமானைத் தரிசித்துப் பிறவிப்
பயனை அடையுங்கள்.
கு-ரை:
முத்தர அசுரர்கள் - மூன்று தரத்தினராகிய அசுரர்கள்
மிகுந்த முப்புரம். அ தகும்+அழல்+இடை+வீட்டினார்-அப்படிப்பட்ட
தக்க நெருப்பின் மத்தியிற் சிக்கி அழியும்படி தொலைத்தவர்.
கொத்து-பூங்கொத்து. இரும்பு வெள்ளி பொன் ஆகிய மூன்று
கோட்டைகளை யுடையராதலால் முத்தர அசுரர் எனப்பட்டனர்.
|