2945. |
அஞ்சுரும் பணிமல ரமுத மாந்தித்தேன் |
|
பஞ்சுரம்
பயிற்றுபைஞ் ஞீலி மேவலான்
வெஞ்சுரந் தனிலுமை வெருவ வந்ததோர்
குஞ்சரம் படவுரி போர்த்த கொள்கையே. 3
|
3.
பொ-ரை: அழகிய வண்டு மலரை அடைந்து தேனைக்
குடித்துப் பஞ்சுரம் என்னும் பண்ணைப் பாடுகின்ற திருப்பைஞ்ஞீலி
என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவன், வெப்பம் மிகுந்த
காட்டில் உமாதேவி அஞ்சுமாறு வந்த யானையின் தோலை
உரித்துப் போர்த்திக் கொண்டவன்.
கு-ரை:
அம் சுரும்பு அணிமலர் அமுதம் மாந்தித் தேன்
பஞ்சுரம் பயிற்று பைஞ்ஞீலி-அழகிய சுரும்பு என்னும் சாதி
வண்டினம் மலரை அடைந்து தேனைக்குடித்துத் தேன் என்னும்
சாதிவண்டினங்களுக்குப் பஞ்சுரம் என்னும் பண்ணைப்பாடிப்
பழக்கும் திருப்பைஞ்ஞீலி. வெம்சுரம்-வெப்பமாகிய காடு. மேவலான்.
மேவல் ஆன் - தங்குதலையுடையவன். கொள்கையே; இங்கு
என்னே என்னும் பயனிலை அவாய்நிலையாற் கூறி முடிந்தது.
|