2957. |
ஞாழலுஞ்
செருந்தியு நறுமலர்ப் புன்னையுந் |
|
தாழைவெண்
குருகயல் தயங்கு கானலில்
வேழம துரித்தவெண் காடு மேவிய
யாழின திசையுடை யிறைவ ரல்லரே. 4
|
4.
பொ-ரை: புலிநகக் கொன்றையும், செருந்தியும்,
நறுமணமிக்க புன்னை மலர்களும், தாழையும், குருக்கத்தியும்
விளங்கும் கடற்கரைச் சோலையுடைய திருவெண்காடு என்னும்
திருத்தலத்தில், யானையின் தோலையுரித்த ஆற்றல் உடையவராயும்,
யாழிசை போன்ற இனிமை உடையவராயும் உள்ள சிவபெருமான்
வீற்றிருந்தருளுகின்றார் அல்லரோ?
கு-ரை:
ஞாழல்-புலிநகக்கொன்றை. ஞாழற்பூவும், செருந்திப்
பூவும் (செருந்தி-செந்நிறப் பூவையுடைய ஒரு மரம்,) புன்னைப்பூவும்
ஆகிய இவைகள் விளங்கும் கடற்கரைச் சோலையில் உள்ள
திருவெண்காடு மேவிய-யானையையுரித்த-இசையையுடைய-இறைவர்
எனத் தனித் தனிக் கூட்டுக. ஞாழல், செருந்தி இரண்டும் முதல்
ஆகுபெயர்.
|