|  
            2959. | 
          மண்ணவர் 
            விண்ணவர் வணங்க வைகலும்  | 
         
         
          |   | 
          எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம்மிறை 
		விண்ணமர் பொழில்கொள்வெண் காடு மேவிய 
            அண்ணலை அடிதொழ அல்லல் இல்லையே.       6 
             | 
         
       
	
             6. 
        பொ-ரை: மண்ணுலகத்தோரும், விண்ணுலகத்தோரும்,  
        மற்றுமுள்ள தேவர்களும் தினந்தோறும் எங்கள் இறைவனை  
        வழிபட்டுப் போற்றுகின்றனர். வானளாவிய சோலைகளையுடைய  
        திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கின்ற அப்  
        பெருமானின் திருவடிகளை வணங்குபவர்கட்குத் துன்பம்  
        இல்லை. 
            கு-ரை: 
        மண்ணவரும் விண்ணவரும், ஏனை விண்ணவரும்  
        தம் பொருட்டு எம்மிறையை வணங்குகின்றனர். அவர்கள்  
        திருவெண்காடு மேவிய அண்ணலைக் கடிது வணங்கிப் பிறவியறுக்க  
        அறிகிலர் என்பது இப்பாடலிற் குறித்த பொருளாகும். அது  
        வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான் என்னம் திருவாசக  
        (தி.8 பா.20)த்தின் கருத்தாகும். 
      
       |