2961.
|
மலையுட
னெடுத்தவல் லரக்கன் நீள்முடி |
|
தலையுட னெரித்தருள் செய்த சங்கரர்
விலையுடை நீற்றர்வெண் காடு மேவிய
அலையுடைப் புனல்வைத்த அடிகள் அல்லரே. 8 |
8.
பொ-ரை: கயிலைமலையை எடுத்த கொடிய அரக்கனாகிய
இராவணனின் நீண்டமுடி, தலை, உடல் ஆகியவற்றை நெரித்து, பின்
அவன் தவறுணர்ந்து சாமகானம் பாட, அருள் செய்த சங்கரர்,
மதிப்புடைய திருநீற்றினைப் பூசியவர். அலையுடைய கங்கையைச்
சடையில் தாங்கித் திருவெண்காடு என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளும் பெருமான் அவர் அல்லரோ?
கு-ரை:
விலையுடை நீற்றர். அன்பே விலை. ஆநந்தமே பயன்.
வைத்த-சடையில் வைத்த.
|