2963. |
போதியர்
பிண்டியர் பொருத்தம் இல்லிகள் |
|
நீதிகள் சொல்லியும் நினைய கிற்கிலார்
வேதியர்
பரவுவெண் காடு மேவிய
ஆதியை யடிதொழ அல்லல் இல்லையே. 10
|
10.
பொ-ரை: புத்தரும், சமணரும் பொருத்தம் இல்லாதவராய்,
இறையுண்மையை உணர்த்தும் நீதிகளை எடுத்துரைத்தும்,
நல்வாழ்வு இல்லாமையால் அவற்றை நினைத்துப் பார்த்தலும்
செய்யாதவர் ஆயினர். எனவே அவர்களைச் சாராது, வேதம் ஓதும்
அந்தணர்கள் பரவித் துதிக்கின்ற திருவெண்காடு என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற அனைத்துலகுக்கும்
முதற்பொருளாகிய சிவபெருமான் திருவடிகளைத் தொழத் துன்பம்
இல்லையாம்.
கு-ரை:
நீதிகள் சொல்லியும் நினையகிற்கிலார்-சைவத்தின்
உயர்வு முதலிய நீதிகளை எடுத்துரைத்தலும் நல்லூழ் இன்மையால்
அவற்றை நினைத்துப் பார்த்தலும் செய்யாதார்.
|