| 
         
          | 2964. | நல்லவர் 
            புகலியுள் ஞான சம்பந்தன் |   
          |  | செல்வன்எம் 
            சிவனுறை திருவெண் காட்டின்மேற் சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்
 அல்லலோ டருவினை அறுதல் ஆணையே.      11
 |        11. 
        பொ-ரை: பசுபுண்ணியம், பதிபுண்ணியம் செய்த நல்லவர்கள் வசிக்கின்ற திருப்புகலியுள் அவதரித்த ஞானசம்பந்தன்,
 செல்வனாகிய எம் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற
 திருவெண்காட்டின் மேல் பாடிய அருந்தமிழ்ப் பாக்கள் பத்தினையும்
 பக்தியோடு ஓதவல்லவர்களுடைய துன்பங்களோடு அவற்றிற்குக்
 காரணமான அருவினையும் அறும் என்பது நமது ஆணையாகும்.
       கு-ரை: 
        பிறவித் துன்பங்கள் அவற்றிற்கு மூலகாரணமான தொலைத்தற்கரிய வினைகளோடும் விட்டொழியும். நமது
 ஆணை-மேலும் மேலும் வரக்கடவதுடன், வினையால் ஆனமையின்
 அல்லலோடு அருவினையறுதல் ஆணை கூறியருளினார்.
 |