| 
       
         
          | 2968. | பாவண 
            மேவுசொன் மாலை யிற்பல |   
          |  | நாவணங் கொள்கையின் நவின்ற செய்கையர் ஆவணங் 
            கொண்டெமை யாள்வ ராயினும்
 கோவணங் கொள்கையர் கொள்ளிக் காடரே.     4
 |  
             4. 
        பொ-ரை: யாப்பிலக்கணம் பொருந்துமாறு சொல்லைத் தொடுக்கும் மாலை போன்ற பாடல்கள் பலவற்றை நாநயத்துடன்
 நவிலுமாறு செய்தவர் 
        இறைவர். அவர் உயிர்களாகிய எங்களை
 அடிமை கொண்டு ஆள்பவராயினும் கோவண ஆடை உடையவர்.
 அப்பெருமான் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில்
 வீற்றிருந்தருளுகின்றார்.
       கு-ரை: 
        பாவ(ண்)ணம்-பாட்டின் இலக்கணம் (யாப்பு). மேவு-பொருந்திய. சொல் மாலையில் பல-சொல்லைத் தொடுக்கும்
 மாலைபோன்ற பாடல்களிற் பலவற்றை. நாவணம்-நாவிற்குப்
 பொருந்து விதமாக. கொள்கையின்-விதிப்படி. நவின்ற-பாடிய.
 ஆவணம் கொண்டு-அடிமை ஓலை எழுதி. எமை ஆள்வர்
 -எங்களையாட்கொள்பவர். ஆயினும், கோவணங்
 கொள்கையர்-கோவணம் உடையாகக் கொள்பவர். அத்தகையர்
 அடியோங்களுக்கு யாது தரற்பாலர் என்பது குறிப்பெச்சம்.
 |