2971. |
இறையுறு
வரிவளை யிசைகள் பாடிட |
|
அறையுறு கழலடி ஆர்க்க ஆடுவர்
சிறையுறு விரிபுனல் சென்னி யின்மிசைக்
குறையுறு மதியினர் கொள்ளிக் காடரே. 7 |
7.
பொ-ரை: திருக்கையில் விளங்கும் அழகிய
வளையல்களையுடைய உமாதேவி இசைபாட, திருவடிகளில்
விளங்கும் வீரக்கழல்கள் ஒலிக்க, இறைவர் திருநடனம் புரிகின்றார்.
அப்பெருமான் பாய்கின்ற கங்கையைத் தடுத்துச் சடையில் தாங்கி,
கலைகுறைந்த சந்திரனையும் தலையில் சூடி, திருக்கொள்ளிக்காடு
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
இறை - முன்கை. உறும் - பொருந்திய. வரிவளை
-கீற்றுக்களையுடைய வளையலையணிந்த உமாதேவியார். வரிவளை
என்பது அன்மொழித்தொகை. அறைஉறு-ஒலித்தலையுடைய. சிறை
உறு-தடுக்கப்படுதலையுடைய. குறையுறுமதி - கலை குறைந்த
சந்திரன்.
|