2972.
|
எடுத்தனன்
கயிலையை யியல்வ லியினால் |
|
அடர்த்தனர்
திருவிர லால்அ லறிடப்
படுத்தன
ரென்றவன் பாடல் பாடலும்
கொடுத்தனர் கொற்றவாள் கொள்ளிக் காடரே. 8 |
8.
பொ-ரை: தன்னுடைய வலிமையினால் கயிலைமலையை
அப்புறப்படுத்த எடுத்த இராவணனை, தம் காற்பெரு விரலையூன்றி
அம்மலையின்கீழ் அடர்த்து அவறும்படி செய்ய, இராவணன் தவறு
ணர்ந்து, தன்னை வருத்திய சிவனைப் போற்றிச் சாமகானம் பாட,
இறைவர் இரங்கி வீரவாளை அருளினார். அப்பெருமானார்
திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
இயல் - தனக்கு உள்ள. வலியினால் - வலிமையினால்.
அலறிடத் திருவிரலால் அடர்த்தனர் என்க. நம்மைச் சிவன்
வருத்தினன் என்று தன்னுள் நினைத்து. அவன் - அவ்விராவணன்.
|