2973.
|
தேடினா
ரயன்முடி மாலுஞ் சேவடி |
|
நாடினா ரவரென்று நணுக கிற்றிலர்
பாடினார் பரிவொடு பத்தர் சித்தமும்
கூடினார்க் கருள் செய்வர் கொள்ளிக் காடரே. 9 |
9.
பொ-ரை: பிரமன் திருமுடியினையும், திருமால்
திருவடியையும் தேட, அவர்களால் எப்பொழுதும்
அணுகமுடியாதவராய் விளங்கும் சிவபெருமான், பக்தர்கள் மனம்
ஒன்றி அன்பால் அகம் குழைந்து பாட அருள்செய்வார்.
அப்பெருமானார் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
அயன்முடி, மால் சேவடி, தேடினார் என்க.
தேடினவர்களாகிய அவர்களால் எப்பொழுதும் அணுக
முடியாதவராயிருப்பர். அன்போடு பாடியவர்களாய் மனமும்
ஒருமைப்பட்ட பத்தர்கட்கு நணுகுபவராய் இருப்பதன்றி அருளும்
செய்வர் திருக்கொள்ளிக்காடர்.
|