| 
         
          | 2975. 
 | நற்றவர் 
            காழியுண் ஞானசம் பந்தன் |   
          |  | குற்றமில் 
            பெரும்புகழ்க் கொள்ளிக் காடரைச் சொற்றமி ழின்னிசை மாலை சோர்வின்றிக்
 கற்றவர் கழலடி காண வல்லரே.             11
 |        11. 
        பொ-ரை: நல்தவத்தோர் வாழ்கின்ற சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன், குற்றமற்ற பெரும்புகழுடைய திருக்கொள்ளிக்காடு
 என்னும் தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனை, அழகு தமிழில்,
 இன்னிசையோடு பாடிய இப்பாமாலையைத் தளராது கற்று ஓத
 வல்லவர்கள் அப்பெருமானின் திருவடிகளைக் காணும் பேறு
 பெறுவார்கள்.
       கு-ரை: 
        நல்ல தவத்தைச் செய்தவர்களையுடைய சீகாழி. குற்றமில் பெரும் புகழ்க் கொள்ளிக்காடர்:- இறைவன் புகழே புகழ்.
 ஏனையோர் புகழ் அனைத்தும் பொய்ப்புகழ் என்பதாகும். இறைவன்
 பொருள் சேர் புகழ் என்ற திருக்குறட் பரிமேலழகருரையானும்
 உணர்க.
 |