| 
         
          | 2979. | தொடைமலி 
            யிதழியுந் துன்னெ ருக்கொடு |   
          |  | புடைமலி சடைமுடி யடிகள் பொன்னகர் படைமலி மழுவினர் பைங்கண் மூரிவெள்
 விடைமலி கொடியணல் விசய மங்கையே.     4
 |  
             4. 
        பொ-ரை: கொன்றை மாலையும், நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட எருக்க மாலையும் பக்கங்களிலே விளங்கும்
 சடைமுடியுடைய அடிகளாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும்
 அழகிய நகரம், மழுவை ஆயுதமாக உடையவரும், பசிய
 கண்களையுடைய வலிமையுடைய வெண்ணிற எருதுவை கொடியாக
 உடைய சிவபெருமானின் திருவிசயமங்கை என்னும்
 திருத்தலமாகும்.
       கு-ரை: 
        இதழி - கொன்றை. துன் - நெருங்கிய. எருக்கு - வெள் எருக்கம் பூமாலை. புடை - பாகம். படை மலி மழு -
 படைமலிந்த மழு என அப்பர் மூர்த்திகள் திருவாக்கிலும்
 இத்தொடர் வருதல் காண்க. மூரி - வலிமை. வெள்விடை. மூரி
 என்ற சொல் மலையாளத்தில் - எருத்துக்கு வழங்கும்.
 |