2983. |
உளங்கைய
இருபதோ டொருபதுங் கொடாங் |
|
களந்தரும் வரையெடுத் திடும்அ ரக்கனைத்
தளர்ந்துட னெரிதர வடர்த்த தன்மையன்
விளங்கிழை யொடும்புகும் விசய மங்கையே. 8 |
8.
பொ-ரை: தன்னுடைய வழியில் இம்மலை தடுக்கின்றது
என்று மனம் கசந்து, இருபது தோள்களும், பத்துத் தலைகளும்
கொண்டதால் தான் வலிமையுடையவன் என்று எண்ணி, எடுத்தற்கு
அரிய கயிலை மலையினைப் பெயர்த்தெடுக்க முயன்ற அரக்கனான
இராவணன் தளர்ந்து உடல் நெரியும் படி அடர்த்த தன்மையுடைய
சிவபெருமான், ஒளிவீசும் ஆபரணங்களை அணிந்த உமாதேவியோடு
வீற்றிருந்தருளுவது திருவிசயமங்கை என்னும் திருத்தலம் ஆகும்.
கு-ரை:
உளம் கைய (இம்மலை செல்லுதற்குத் தடையாயிருந்த
தென்று) மனம் வெறுக்க. அளந்து - தன் இருபது தோளும் பத்துத்
தலையும் கொண்ட தன் வலிமையை அளந்து தெரிந்துகொண்டு.
அருவரை - எடுத்தற்கரிய கயிலைமலையை. விளங்கு இழை -
(அம்மையாரால் அணியப்பெற்றதால்) விளங்கும் இழை.
(அணி)யையுடைய அம்மையார்.
|