2985. |
கஞ்சியுங்
கவளமுண் கவணர் கட்டுரை |
|
நஞ்சினுங் கொடியன நமர்கள் தேர்கிலார்
செஞ்சடை முடியுடைத் தேவன் நன்னகர்
விஞ்சையர் தொழுதெழு விசய மங்கையே. 10 |
10.
பொ-ரை: கஞ்சி உண்ணும் புத்தர்களும், கவனமாக
உணவு உண்ணும் சமணர்களும் உரைக்கின்ற கருத்துக்கள் நஞ்சினும்
கொடியனவாகும். நம்மவர்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளார். சிவந்த
சடைமுடியுடைய தேவாதி தேவனின் நல்ல நகரம் வித்தியாதரர்கள்
தொழுது வணங்கும் திருவிசயமங்கை என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
கவணர் - மாறுபட்ட தன்மையை யுடையவர்கள்,
வடசொல். கஞ்சியும் கவளமும் உண்பவர், முறையே சமணரும்
புத்தரும் ஆவார்.
|