2989. |
கணியணி
மலர்கொடு காலை மாலையும் |
|
பணியணி பவர்க்கருள் செய்த பான்மையர்
தணியணி யுமையொடு தாமும் தங்கிடம்
மணியணி கிளர்வைகன் மாடக் கோயிலே. 3 |
3.
பொ-ரை: வேங்கைமரத்தின் அழகிய மலர்களைக்
கொண்டு காலையும், மாலையும் வழிபாடு செய்பவர்கட்கு
அருள்செய்யும் தன்மையுடைவர் இறைவர். அவர் குளிர்ந்த
அருளையே தம் வடிவமாகக் கொண்டு உமாதேவியோடு தாமும்
வீற்றிருந்தருளும் இடமாவது இரத்தினங்களால் அழகுபடுத்தப்பட்ட
திருவைகல் என்னும் திருத்தலத்திலுள்ள மாடக்கோயிலாகும்.
கு-ரை:
கணி-கண்ணி, அதே குறிக்கோளாகக் கருதி,
அணி-அழகிய. பணி-திருப்பணியாகக்கொண்டு.
அணிபவர்க்கு-காலையும் மாலையும் அணிமலர் கொணர்ந்து
அணிபவர்களுக்கு. அருள் செய்த. பான்மையர்-தன்மையுடையவர்.
தணி - (தண்+இ) குளிர்ந்த அருள். அணி - தன் வடிவாகக்கொண்ட
உமை. மணி அணிகிளர் -இரத்தினங்களால் அழகு விளங்குகின்ற
வைகலில். மாடக்கோயில், பான்மையர் உமையொடும் தங்கும்
இடம்.
|