2992. |
நிறைபுனல் பிறையொடு நிலவு நீள்சடை |
|
இறையவர்
உறைவிடம் இலங்கு மூவெரிப
மறையொடு
வளர்வுசெய் வாணர் வைகலில்
திறையுடை நிறைசெல்வன் செய்த கோயிலே. 6 |
6.
பொ-ரை: புனிதமான கங்கையையும் பிறைச்சந்திரனையும்
அணிந்துள்ள நீண்ட சடைமுடியுடைய இறைவர் வீற்றிருந்தருளும் இடமாவது,
மூவகை அக்கினிகளை வேதங்களோடு வளர்க்கின்ற
அந்தணர்கள் வாழ்கின்ற திருவைகல் என்னும் திருத்தலத்தில்,
சிற்றரசர்கள் கப்பம் கட்ட நிறைந்த செல்வனாக விளங்கும்
கோச்செங்கட்சோழன் என்ற மாமன்னன் கட்டிய மாடக்கோயில்
ஆகும்.
கு-ரை:
நிலவும் நீள்சடை. மூஎரி மறையொடு வளர்வு
செய்வாணர் - மூவகை அக்கினிகளை - வேதத்தினோடு
வளர்க்கின்றவர். எரிவாணர் - அக்கினியில் வாழ்பவர்; வாணர்.
(வாழ்+க்+அர்) திறை உடை நிறை செல்வன் - அரசர்கட்டும்
கப்பத்தையுடைய நிறைந்த செல்வன்; கோச்செங்கட் சோழ
நாயனார்.
|