2996. |
கடுவுடை
வாயினர் கஞ்சி வாயினர் |
|
பிடகுரை
பேணிலார் பேணு கோயிலாம்
மடமுடை யவர்பயில் வைகல் மாநகர்
வடமலை யனையநன் மாடக் கோயிலே. 10
|
10.
பொ-ரை: கடுக்காயைத் தின்னும் வாயுடையவர்களும்,
கஞ்சி குடிக்கும் வாயுடையவர்களுமான சமணர்களையும்,
புத்தர்களின் பிடக நூலையும் பொருட்படுத்தாத சிவனடியார்கள்
போற்றும் கோயிலாவது, மடம் என்னும் பண்புடைய மகளிர்
பழகுகின்ற திருவைகல் என்னும் மாநகரில் மேருமலையை ஒத்த
சிறப்புடைய நன்மாடக் கோயில் ஆகும்.
கு-ரை:
கடு - உடைவாயினர் - கடுக்காயைத் தின்பவர்
(புத்தர்). கஞ்சி வாயினர் - கஞ்சியைக் குடிப்போர் (சமணர்).
இவர்கள் சொல்லப்படுகின்ற திரிபிடகம் முதலிய அவர்கள் சமய
நூல்களைப் பொருட்படுத்தாதவராகிய சிவனடியார்கள் பாராட்டும்
கோயில். வடமலை-மேருமலை (போன்ற) மாடக்கோயிலாம்.
|