2997. |
மைந்தன
திடம்வைகல் மாடக் கோயிலைச் |
|
சந்தமர் பொழிலணி சண்பை ஞானசம்
பந்தன தமிழ்கெழு பாடல் பத்திவை
சிந்தைசெய் பவர்சிவ லோகஞ் சேர்வரே. 11 |
11.
பொ-ரை: அளவில்லாத ஆற்றலுடைய இறைவன்
வீற்றிருந்தருளும் இடமாகிய திருவைகல் என்னும் திருத்தலத்திலுள்ள
மாடக் கோயிலைச் சந்தன மரங்கள் கொண்ட சோலைகளையுடைய
அழகிய திருச்சண்பை நகரில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய
இத்தமிழ்ப் பதிகத்தைச் சிந்தையிலிருத்திப் போற்ற வல்லவர்கள்
சிவலோகத்தில் இருப்பர்.
கு-ரை:
சந்து - சந்தன மரங்கள். சண்பை-சீகாழி. சிந்தை
செய்பவர் சிவலோகத்து இருப்பர்.
|