2999. |
மையகண் மலைமகள் பாக மாயிருள் |
|
கையதோர் கனலெரி கனல ஆடுவர்
ஐயநன் பொருபுனல் அம்பர்ச் செம்பியர்
செய்யகண் ணிறைசெய்த கோயில் சேர்வரே. 2 |
2.
பொ-ரை: மைபூசிய கண்ணையுடைய மலைமகளான
உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டு, இருளில், இறைவர் கையில்
கனன்று எரிகின்ற நெருப்பானது சுவாலை வீச, நடனம் ஆடுவார்.
அப்பெருமானார் கரையை மோதுகின்ற அரிசிலாற்றினால் நீர்
வளமிக்க அழகிய நல்ல அம்பர் மாநகரில் கோச்செங்கட் சோழன்
கட்டிய கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
மையகண் - மையை அணிந்த கண். மைய - குறிப்புப்
பெயரெச்சம். இருள் ... ஆடுவர். இருளில் கையில் உள்ளதாகிய
நெருப்பானது சுவாலை வீச, ஆடுவர். ஐய... அம்பர் - அழகிய நல்ல
கரையை மோதும் (அரிசிலாற்றின்) நீர்வளம் பொருந்திய அம்பர்.
செய்யகண் - செங்கண். இறை - அரசன்.
|