|
| 3001. |
இரவுமல் கிளமதி சூடி யீடுயர் |
| |
பரவமல்
கருமறை பாடி யாடுவர்
அரவமோ
டுயர்செம்மல் அம்பர்க் கொம்பலர்
மரவமல் கெழினகர் மருவி வாழ்வரே. 4 |
4.
பொ-ரை: இரவில் ஒளிரும் இளம்பிறைச் சந்திரனைச்
சூடி, தம் பெருமையின் உயர்வைத் துதிப்பதற்குரிய அருமறைகளை
இறைவர் பாடி ஆடுவார். பாம்பணிந்து உயர்ந்து விளங்கும்
சம்மலாகிய சிவபெருமான், கொம்புகளில் மலர்களையுடைய
வெண்கடம்ப மரங்கள் நிறைந்து சோலைகளையுடைய அழகிய
அம்பர் மாநகரில் வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
மல்கு இளமதி - மிகுந்த இளமையையுடைய பிறைச்
சந்திரன். ஈடுஉயர் பரவமல்கு அருமறை - (தன்) பெருமையின்
உயர்வைத் துதிப்பதற்குப் பொருந்திய அரிய வேதத்தைப்பாடி
ஆடுவர். ஈடு - பெயர் உயர் - (உயர்வு) உ பண்புப்பெயர் விகுதி.
அரவமோடு உயர் செம்மல் அம்பர் - ஆரவாரத்தோடு உயர்ந்த
(அரிசில் நதியின்) மிகு வளத்தையுடைய அம்பர். செம்மல் - மிகுதி.
கொம்பு ... நகர் - கொம்புகளில் மலர்களையுடைய வெண்கடம்பச்
சோலைகளையுடைய (அம்பர்) நகர்.
|