3003. |
கழல்வளர்
காலினர் சுடர்கை மல்கவோர் |
|
சுழல்வளர்
குளிர்புனல் சூடி யாடுவர்
அழல்வளர் மறையவர் அம்பர்ப் பைம்பொழில்
நிழல்வளர் நெடுநகர் இடம தென்பரே. 6
|
6.
பொ-ரை: இறைவர் வீரக்கழல்கள் அணிந்த திருவடிகள்
உடையவர். சுடர்விட்டு எரியும் நெருப்பைக் கையில் ஏந்தியுள்ளவர்.
நீர்ச்சுழிகளையுடைய குளிர்ந்த கங்கையைச் சடையில் சூடி ஆடுவர்.
அப்பெருமானார், வேள்வித்தீ வளர்க்கும் அந்தணர்கள் வாழ்கின்ற
அம்பர் மாநகரில் அழகிய சோலைகளையுடைய நிழல்தரும் பெருந்
திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
கழல்வளர் - கழலோசை மிகும், காலையுடையவர்.
சுடர் - நெருப்பு. சுழல்...புனல் - நீர்ச்சுழிகளையுடைய கங்கை
நீரைச், சூடி ஆடுவர். அழல் - நித்திய அக்கினி. நெடுநகர் -
பெருந்திருக்கோயில். நகர் - கோயில். நடுவூர் நகர்செய்து
அடுபவம் துடைக்கும் என்னும் கல்லாடத்தால் அறிக.
|