3004. |
இகலுறு
சுடரெரி யிலங்க வீசியே |
|
பகலிடம்
பலிகொளப் பாடி யாடுவர்
அகலிட மலிபுகழ் அம்பர் வம்பவிழ்
புகலிட நெடுநகர் புகுவர் போலுமே. 7
|
7.
பொ-ரை: இறைவர், வலிமைமிக்க சுடர்விட்டு எரியும்
நெருப்பை ஏந்தித் தோள்களை வீசிப் பலி ஏற்கும் பொருட்டுப்
பாடி ஆடுவர். அப்பெருமானார் அகன்ற இப்பூவுலகெங்கும் பரவிய
மிகு புகழையுடைய அம்பர் மாநகரில், தெய்விக மணம் கமழும்
திருக்கோயிலைத் தமது இருப்பிடமாகக் கொண்டு
வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
இகல்உறு - வலிமை மிக்க. அகல் இடம் மலிபுகழ்
அம்பர் - இந்த உலகமெங்கும் மிகப் பரவிய புகழையுடைய அம்பர்.
போலும் - உரையசை.
|