3006. |
வெறிகிளர்
மலர்மிசை யவனும் வெந்தொழிற் |
|
பொறிகிள
ரவணைப் புல்கு செல்வனும்
அறிகில அரியவர் அம்பர்ச் செம்பியர்
செறிகழ லிறைசெய்த கோயில் சேர்வரே. 9 |
9.
பொ-ரை: நறுமணம் கமழும் தாமரை மலர்மேல்
வீற்றிருக்கும் பிரமனும், கொல்லும் தன்மையுடைய பாம்பைப்
படுக்கையாகக் கொண்டுள்ள செல்வனாகிய திருமாலும், அறிதற்கு
அரியரான இறைவர் திரு அம்பர் மாநகரில் கோச்செங்கட்சோழ
மன்னன் கட்டிய திருக்கோயிலில் தம் கழலணிந்த திருவடி
பொருந்த வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
வெறி - வாசனை. வெந்தொழில் ... அரவு - கொடிய
கொலைத் தொழிலையுடையதாகிய அரவு.
படப்புள்ளிகளையுடையதாகிய அரவு. புல்கு - பொருந்திய. அடிதேடி
அறியாதவனைச் செல்வன் என்றது குறிப்பு மொழி. அறனன்று
மாதவனென்ப துலகு எந்தை தாள்காணான் நாணுக் கொள என்ற
குமரகுருபரர் வாக்கு இங்கு நினைவிற்கு வருகின்றது. செறிகழல் -
அணிந்த கழல், செம்பியர் இறை - சோழ அரசர்.
|