| 
         
          | 3009. | மாதமர் மேனிய னாகி வண்டொடு |   
          |  | போதமர் பொழிலணி பூவ ணத்துறை வேதனை விரவலர் அரண மூன்றெய்த
 நாதனை அடிதொழ நன்மை யாகுமே.     1
 |  
       
             1. 
        பொ-ரை: உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக்கொண்டு, வண்டமர்கின்ற மலர்கள் உள்ள
 சோலையுடைய அழகிய திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில்
 வீற்றிருந்தருளுகின்ற, துன்பம்தரும் பகையசுரர்களின் மூன்று
 கோட்டைகளையும் அம்பு எய்து அழித்த நாதனான சிவபெருமானின்
 திருவடிகளைத் தொழ எல்லா நலன்களும் உண்டாகும்.
      கு-ரை: 
        போது அமர்பொழில் - மலர்கள் உள்ள சோலை. விரவலர் - பகைவர்களாகிய அசுரர்கள். அரணம் மூன்றும் எய்த
 - மதில் மூன்றையும் எய்த (நாதன்).
 |