3012. |
வாசநன் மலர்மலி மார்பில் வெண்பொடிப் |
|
பூசனைப்
பொழில்திகழ் பூவ ணத்துறை
ஈசனை மலர்புனைந் தேத்து வார்வினை
நாசனை யடிதொழ நன்மை யாகுமே. 4
|
4.
பொ-ரை: நறுமணம் கமழும் மலர்மாலைகளை
அணிந்துள்ள மார்பில், திருவெண்ணீற்றினைப் பூசி,
சோலைகளையுடைய திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான், மலர்புனைந்து ஏத்தும்
அன்பர்களின் வினையைப் போக்குவான். அப்பெருமானின்
திருவடிகளைத் தொழ எல்லா நன்மைகளும் உண்டாகும்.
கு-ரை:
வெண்பொடி பூசனை - வெள்ளியநீறு பூசிய வனை;
ஈசனை. வினை - பாவம். பாவநாசனை அடிதொழ நன்றி யாகும்.
பாவநாசன், சிவனுக்கொரு பெயர். மன்ன... பாவநாச நின்சீர்கள்
பரவவே என்பது திருவாசகம். பூசன் - இரண்டுறுப்பால் முடிந்த
குறிப்பு வினைமுற்று.
|