| 
         
          | 3015. | பறைமல்கு 
            முழவொடு பாட லாடலன் |   
          |  | பொறைமல்கு பொழிலணி பூவ ணத்துறை மறைமல்கு பாடலன் மாதொர் கூறினன்
 அறைமல்கு கழல்தொழ அல்லல் இல்லையே.    7
 |  
            7. 
        பொ-ரை: பறையின் ஒலியும், முழவின் ஓசையும் ஒலிக்கப் பாடி ஆடுபவன் இறைவன். அமைதி தவழும் சோலையையுடைய
 அழகிய திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவன்.
 நால்வேதங்களையும் பாடுபவன். உமாதேவியைத் தன் திருமேனியின்
 ஒரு கூறாகக் கொண்டவன். அப்பெருமானின் ஒலிக்கின்ற
 கழலணிந்த திருவடிகளைத் தொழத் துன்பம் சிறிதும் இல்லை.
       கு-ரை: 
        பாடல் ஆடலன் - பாடுதலோடு ஆடலையுடையவன், இங்குப் பாடல் - ஆடுங்காற்பாடுவது; மூன்றாம் அடியிற் கூறுவது:-
 இருந்து பாடும் வேதப்பாடல். அறைமல்கு - ஒலித்தல் மிகுந்த; கழல்.
 |