| 
         
          | 3019. | புண்ணியர் தொழுதெழு பூவ ணத்துறை |   
          |  | அண்ணலை யடிதொழு தந்தண் காழியுள் நண்ணிய அருமறை ஞானசம் பந்தன்
 பண்ணிய தமிழ்சொலப் பறையும் பாவமே.     11
 |       11. 
        பொ-ரை: புண்ணியர்கள் தொழுது போற்றுகின்ற திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற
 தலைவரான சிவபெருமானின் திருவடிகளைத் தொழுது போற்றி,
 அழகிய, குளிர்ச்சியான சீகாழியில் அவதரித்த அருமறைவல்ல
 ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்ப் பாடல்களை ஓதவல்லவர்களின்
 பாவம் யாவும் நீங்கும்.
       கு-ரை: 
        பண்ணிய - செய்த; இயற்றிய. புகழ்கொண்டு மற்றிவர் செய்யும் உடம்பு என்பதனாலும்: செய்யுள் என்னும் பெயராலும்
 அறிக. பறையும் - வெளிக்கிளம்பி நீங்கும் பறையும் பாவங்களான
 என்ற சுந்தரமூர்த்தி சுவாமிகள் வாக்கினாலும் அறிக.
 |