3021. |
வேதியன் விடையுடை விமலன் ஒன்னலர் |
|
மூதெயில்
எரியெழ முனிந்த முக்கணன்
காதியல் குழையினன் கருக்கு டியமர்
ஆதியை அடிதொழ அல்ல லில்லையே. 2 |
2.
பொ-ரை: வேதத்தை அருளிச் செய்தவனும், வேதப்
பொருளாக விளங்குபவனும், இயல்பாகவே பாசங்களின் நீங்கிய
வனும், பகையசுரர்களின் மூன்று மதில்களும் எரிந்து சாம்பலாகுமாறு
கோபித்த முக்கண்ணனுமான சிவபெருமான் காதில் குழை
அணிந்தவனாய்த் திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்றான். எப்பொருட்கும் முதல்வனான
அப்பெருமானின் திருவடிகளைத் தொழத் துன்பம் இல்லை.
கு-ரை:
மூது எயில் - பழமையான மதில், இங்குத் திரிபுரம்.
இயல் - பொருந்திய.
|