| 
         
          | 3023. | ஊனுடைப் பிறவியை அறுக்க உன்னுவீர் |   
          |  | கானிடை 
            யாடலான் பயில்க ருக்குடிக் கோனுயர் கோயிலை வணங்கி வைகலும்
 வானவர் தொழுகழல் வாழ்த்தி வாழ்மினே.       4
 |       4. 
        பொ-ரை: வினைப்பயனை அனுபவிக்க உடம்பெடுத்த இப்பிறவியை ஒழிக்க நினைக்கும் மாந்தரீர்! சுடுகாட்டில் திருநடனம்
 செய்யும் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கருக்குடி என்னும்
 திருத்தலத்திலுள்ள உயர்ந்த கோயிலை வணங்கியும், நாள்தோறும்
 வானவர்கள் தொழுகின்ற அப்பெருமானின் திருவடிகளை
 வாழ்த்தியும் வாழ்வீர்களாக!
      கு-ரை: 
        ஊன் - உடம்பு. அறுக்க - ஒழிக்க. உன்னுவீர் - நினைக்கும் மாந்தரீர். கான் இடை ஆடலான் - சுடுகாட்டில்
 ஆடுதலை யுடைவன். கழல் - திருவடி.
 |