3027. |
எறிகடல் புடைதழு விலங்கை மன்னனை |
|
முறிபட வரையிடை யடர்த்த மூர்த்தியார்
கறைபடு பொழின்மதி தவழ்க ருக்குடி
அறிவொடு தொழுமவர் ஆள்வர் நன்மையே. 8 |
8.
பொ-ரை: அலைவீசுகின்ற கடலையுடைய இலங்கை
மன்னனான இராவணனை நிலை கெடும்படி மலையிடையில் வைத்து
அடர்த்த சிவமூர்த்தியாகிய இறைவர், மரங்களின் அடர்த்தியால்
இருண்ட சோலைகளில் சந்திரன் தவழும் திருக்கருக்குடி என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவராய், தம்மை ஞானத்தால் தொழும்
அடியவர்கட்கு நன்மையைத் தந்தருளி ஆட்சி செய்கின்றார்.
கு-ரை:
கறைபடு பொழில். நன்மை ஆள்வர் -
நன்மைகளையெல்லாம் உடையராயிருப்பர். அறிவொடு தொழுமவர்
என்ற இலேசினான் அபுத்திபூர்வமாகச் செய்யும் சிவபுண்ணியமும்
பயன் தாராதொழியாது என்பதும் கொள்க.
|