3035. |
கொங்கலர் வன்மதன் வாளி யைந்தகத் |
|
தங்குள
பூதமும் அஞ்ச ஐம்பொழில்
தங்கர வின்படம் அஞ்சுந் தம்முடை
அங்கையில் ஐவிரல் அஞ்செ ழுத்துமே. 5 |
5.
பொ-ரை: வலிய மன்மதனின் அம்பானது தேன்துளிர்க்கும்
தாமரை, அசோகு, மா, முல்லை, கருங்குவளை என்ற ஐந்து மலர்கள்
ஆகும். இவ்வுலகிலுள்ள பூதங்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று,
ஆகாயம் என்ற ஐந்தாகும். சோலைகள் அரிசந்தனம், கற்பகம்,
சந்தானம், பாரிசாதம், மந்தாரம் என ஐந்தாகும். பாம்பின் படம்
ஐந்து ஆகும். செபிப்போருடைய கைவிரல்கள் ஐந்தாகும். இவ்வாறு
ஐவகையாகக் காணப்படும் யாவற்றுக்கும் ஒப்ப, மந்திரமும்
திருவைந்தெழுத்தேயாகும்.
கு-ரை:
முதல் இரண்டடிக்கு - வல்மதன் கொங்கு அலர்வாளி
ஐந்து - வலிய மன்மதனது மணத்தையுடைய மலர் அம்பு ஐந்து
என்க. அகம் - இடம்; உலகம். இவ்வுலகத்தில் உள்ள பூதங்களும்
அஞ்ச. (அஞ்சு + அ) ஐந்து ஆவன. ஐம்பொழில் - கற்பகச்
சோலைகளும், ஐந்தாவன - தங்கு அரவின் படம் அஞ்சு,
தம்முடைய அங்கையில் ஐவிரல், இறைவன் திருமேனியில் அணியாக
உள்ள பாம்பின் படமும் ஐந்து, செபிப்போரது கையில் உள்ள
விரலும் ஐந்து. இவற்றிற்கொப்ப மந்திரமும் அஞ்செழுத்து மாயின.
|