| 
         
          | 3042. | உருவினார் உமையொடும் ஒன்றி நின்றதோர் |   
          |  | திருவினான் வளர்சடைத் திங்கள் கங்கையான் வெருவிவா னவர்தொழ வெகுண்டு நோக்கிய
 செருவினான் உறைவிடம் திருவிற் கோலமே.      1
 |  
       
             1. 
        பொ-ரை: அழகே உருவான உமாதேவியோடு ஒன்றிநின்ற, செல்வரான சிவபெருமான் தம் சடைமுடியில் திங்களும், கங்கையும்
 சூடியவர். வானவர்கள் அஞ்சித் தொழுது போற்றுமாறு,
 வெகுண்டெழுந்து போர்க்கோலம் பூண்டு வில்லேந்தி, அப்பெருமான்
 வீற்றிருந்தருளுகிற இடம் திருவிற்கோலம் ஆகும்.
       கு-ரை: 
        உரு - அழகு. உருவின் ஆர் - அழகினால் நிரம்பிய. உமையொடும் ஒன்றி நின்றது. ஓர் திருவினான் - வேறறக் கலந்து
 நின்ற செல்வத்தன். அவளால்வந்த வாக்கம் இவ் வாழ்க்கை
 யெல்லாம் (சிவஞான சித்தியார். சூ1.69.) திங்கள் கங்கையான் -
 திங்களோடு அணிந்த கங்கையையுடையவன்.
 |