| 
         
          | 3043. | சிற்றிடை யுமையொரு பங்க னங்கையில் |   
          |  | உற்றதோர் எரியினன் ஒரு சரத்தினால் வெற்றிகொள் அவுணர்கள் புரங்கள் வெந்தறச்
 செற்றவன் உறைவிடம் திருவிற் கோலமே.        
            2
 |  
             2. 
        பொ-ரை: சிறிய இடையையுடைய உமாதேவியைத் தம் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு, அழகிய கையில் நெருப்பு
 ஏந்தி விளங்கும் சிவபெருமான், ஓர் அம்பால் அசுரர்களின் மூன்று
 புரங்களும் வெந்தழியுமாறு போர்செய்து வெற்றி கொண்டவர்.
 அப்பெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம் திருவிற்கோலம் என்னும்
 கோயிலாகும்.
       கு-ரை: 
        சரம் - அம்பு. ஒரு சரத்தினால் செற்றவன் (அழித்தவன்) என்றமையானே புரங்கள் மூன்றென்பதும் பெற்றாம்.
 ஏகம்பர் தங்கையில் ஓரம்பே முப்புரம் உந்தீபற என்னும்
 திருவாசகமும் (தி.8 பா.296) காண்க.
 |