3044. |
ஐயன்நல் லதிசயன் அயன்விண் ணோர்தொழும் |
|
மையணி
கண்டனார் வண்ண வண்ணம்வான்
பையர வல்குலாள் பாகம் ஆகவும்
செய்யவன் உறைவிடம் திருவிற் கோலமே. 3
|
3.
பொ-ரை: இறைவர் யாவற்றுக்கும் தலைவர். பல பல
வேடம் கொள்ளும் அதிசயர். பிரமமும், மற்றுமுள்ள
விண்ணோர்களும் தொழுகின்ற மை போன்ற இருண்ட கண்டத்தர்.
நல்ல வண்ணமுடைய, பாம்பின் படம் போன்ற அல்குலையுடைய
உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு
செம்மேனியராய் அவர் வீற்றிருந்தருளும் இடம் திருவிற்கோலம்
ஆகும்.
கு-ரை:
ஐயன் - தலைவன். அதிசயன் - பல பல வேடமாகும்
பரன் என்னும் மேம்பாட்டையுடையவன். அயன் விண்ணோர் -
பிரமனும் தேவரும். மை:- நஞ்சுண்ட கறுப்புக்கு ஒப்பு. கண்டனார் -
திருக்கழுத்துடையவர். வண்ணம் செய்யவன்; வண்ணவான் பையரவு
அல்குலாள் (அம்பிகை) பாகம் ஆகவும் செய்யவன். செந்தீ
வண்ணன் பவளம் போல் மேனியன், அம்பிகையின் நிறம் கலந்தும்
வேறுபடாத செம்மையன். அவன் உறைவிடம் திருவிற்கோலம்.
இவ்விற்கோலம் நீங்கிப், பண்டைய தற்கோலம் உடைமை
விளங்கிய தலத்தின் பெயரே, தற்கோலம் என மருவிற்று.
(தி.12. திருஞான.1005.)
|