3050. |
சீர்மையில் சமணொடு சீவ ரக்கையர் |
|
நீர்மைஇல்
உரைகள்கொள் ளாத நேசர்க்குப்
பார்மலி பெருஞ்செல்வம் பரிந்து நல்கிடும்
சீர்மையி னான்இடம் திருவிற் கோலமே. 10 |
10.
பொ-ரை: இறையுண்மையை உணரும் தன்மையில்லாத
சமணர்களும், புத்தர்களும் கூறும் உரைகளைக் கொள்ளாது, இறை
நம்பிக்கையுடன் அவன்மீது பக்தி செலுத்துபவர்கட்கு உலகில்
பெருஞ்செல்வத்தைப் பரிவுடன் இறைவன் தருவான். அத்தகைய
மேன்மையுடைய பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவிற்கோலம்
ஆகும்.
கு-ரை:
சீர்மை - ஒழுங்கு. நான்காமடியிற் சீர்மை - மேன்மை.
சீர்மை சிறப்பொடு நீங்கும் (குறள் - 195) என்பதிற்போல, சமணர்
என்ற சொல் சமண் என விகுதி குன்றி வந்தது; தூது, அரசு
அமைச்சு என்றாற் போல். சீவரம் - புத்தமதத் துறவி யுடுத்தும் காவி
ஆடை. கையர் வெறுக்கத் தக்கவர். கைத்தல் - வெறுத்தல்.
|