3051. |
கோடல்வெண் பிறையனைக் கூக மேவிய |
|
சேடன
செழுமதில் திருவிற் கோலத்தை
நாடவல் லதமிழ் ஞானசம் பந்தன
பாடல்வல் லார்களுக் கில்லை பாவமே. 11
|
11.
பொ-ரை: வளைந்த வெண்ணிறப் பிறைச்சந்திரனைச்
சடையில் சூடி, கூகம் என்னும் ஊரில், அழகிய, வளமையான
மதில்களையுடைய திருவிற்கோலம் என்னும் திருக்கோயிலில்
வீற்றிருந்தருளும் சிவபெருமானை நினைத்துத் தமிழ் ஞானசம்பந்தன்
பாடல்களைப் பாட வல்லவர்கட்குப் பாவம் இல்லை.
கு-ரை:
கோடல் - கோடுதல்; வளைதல். சேடன - சிவ
பெருமானுடைய (திருவிற்கோலத்தை).
|