| 
         
          | 3054. | தொண்டனை செய்தொழில் துயரறுத் துய்யலாம் |   
          |  | வண்டணை கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக் கண்டுணை நெற்றியான் கழுமல வளநகர்ப்
 பெண்டுணை யாகவோர் பெருந்தகை யிருந்ததே.    3
 |  
     
             3. 
        பொ-ரை: தொன்றுதொட்டு உயிர்களைப் பற்றி வருகின்ற வினையால் உண்டாகும் துன்பத்தை நீக்கி உய்விக்கும் பொருட்டு,
 வண்டுகள் மொய்க்கின்ற தேனையுடைய கொன்றை மலர்களைச்
 சடைமுடியில் அணிந்தும், நெற்றியில் ஒரு கண் கொண்டும்,
 கழுமலம் என்னும் வளநகரில் உமாதேவியை உடனாகக் கொண்டும்
 பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்.
       கு-ரை: 
        தொண்டு அணைசெய் தொழில் துயர் - தொன்று தொட்டே ஆன்மாவைப்பற்றி வருத்தும் தொழிலையுடைய வினைகள்.
 "தொல்லை வல்வினை தொந்தம்" என்ற அப்பர் திருக்குறுந்தொகை
 காண்க. பெண்துணையாக ஓர் பெருந்தகையிருந்தது என்றது -
 எவ்வுயிர்க்கும்" அருந்துணையாயும், பெருந்துணையாயும் உற்றார்
 இலாதார்க்கு உறுதுணையாயும் உள்ள ஒரு பெருந்தகை" ஓர் பெண்
 துணையாக வீற்றிருக்கிறார் என்பது ஒரு நயம்.
 |