3056. |
அடைவிலோம்
என்றுநீ அயர்வொழி நெஞ்சமே |
|
விடையமர்
கொடியினான் விண்ணவர் தொழுதெழும்
கடையுயர் மாடமார் கழுமல வளநகர்ப்
பெடைநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே. 5 |
கு-ரை:
அடைவு - பற்றுக்கோடு. சேருமிடம் - புகலிடம்.
அயர்வு - தளர்ச்சி. கடை உயர் மாடம் ஆர் - கடைவாயில்கள்
உயர்ந்த மாளிகைகளையுடைய. (கழுமலவளநகர்). இனி, கடைஉயர்
(மாடம் ஆர்) கழுமலம் என்றுகொண்டு, ஊழிக்காலத்தில் உயர்கின்ற
கழுமல வளநகர் எனினும் ஆம். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
புராணம் 4 ஆம் செய்யுட் கருத்து என்க.
|