| 
         
          | 3066. | செவிகளார் விப்பன சிந்தையுட் சேர்வன |   
          |  | கவிகள்பா டுவ்வன கண்குளிர் விப்பன புவிகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடி
 அவிகளுய்க் கப்படும் அடிகள்வே டங்களே.     4
 |  
       
       
	         4. 
        பொ-ரை:இப்பூமியைச் செழிக்கச் செய்யும் நீர்வளமுடைய திருந்துதேவன்குடியில் வீற்றிருந்து, வேள்வியின் அவிர்ப் பாகத்தை
 ஏற்று உயிர்களை உய்யச் செய்யும் சிவபெருமானின் திரு
 வேடங்களின் சிறப்புக்கள் கேட்கச் செவிகட்கு இன்பம் தருவன.
 நினைக்கச் சிந்தையில் சீரிய கருத்துக்களைத் தோற்றுவிப்பன.
 கவிபாடும் ஆற்றலைத் தருவன. சிவவேடக்காட்சிகள் கண்களைக்
 குளிர்விப்பன.
       கு-ரை: 
        திருவேடத்தின் புகழைக் கேட்டாலும் மகிழ்வு உண்டாம். அவி-வேள்வித்தீயில் இடும் அவிசு.
 |