| 
         
          | 3074. | பிடியெலாம் பின்செலப் பெருங்கைமா மலர்தழீஇ |   
          |  | விடியலே தடமூழ்கி விதியினால் வழிபடும் கடியுலாம் பூம்பொழிற் கானப்பேர் அண்ணல்நின்
 அடியலால் அடைசரண் உடையரோ வடியரே.      1
 |  
             1. 
        பொ-ரை: பெண் யானைகள் பின்தொடர, பெரிய தும்பிக்கையுடைய ஆண்யானையானது, விடியற்காலையிலேயே
 குளத்தில் மூழ்கி, மலர்களை ஏந்தி விதிமுறைப்படி வழிபடுகின்ற
 நறுமணம் கமழும் பூஞ்சோலையுடைய திருக்கானப்பேர் என்னும்
 திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளை
 யன்றி, அடியவர்கள் சரணம் புகுவதற்கு யாது உள்ளது?
      கு-ரை: 
        பெரும் கை(ம்)மா - தலைவனாகிய துதிக்கையையுடைய யானை. மலர்தழீஇ - மலர்களை ஏந்திக்கொண்டு. கடி -
 வாசனை, உலாம் - உலாவும்.
 |