3080. மானமா மடப்பிடி வன்கையால் அலகிடக்
  கானமார் கடகரி வழிபடுங் கானப்பேர்
ஊனமாம் உடம்பினில் உறுபிணி கெடஎண்ணில்
ஞானமா மலர்கொடு நணுகுதல் நன்மையே.       7

     7. பொ-ரை: பெரிய பெண் யானை தன் வலியகையால்
அலகிடக் கானகத்திலுள்ள மதமுடைய பெரிய ஆண் யானையானது
வழிபடுகின்ற திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்திலுள்ள
இறைவனை, குற்றமுடைய இவ்வுடம்பிலுள்ள உயிரைப் பிணித்துள்ள
ஆணவமாகிய நோய் தீர ஞானமாகிய மலர்கொண்டு மனம், வாக்கு,
காயத்தால் வழிபட நன்மைகள் உண்டாகும்.

     கு-ரை: தலவரலாறு இப்பாட்டிலும் முதற்பாட்டிலும் காண்க.
ஞான மாமலர்:-ஞானம் அட்டபுட்பங்களில் ஒன்று.