3084.
|
காட்டகத்து
ஆடலான் கருதிய கானப்பேர் |
|
கோட்டகத்
திளவரால் குதிகொளும் காழியான்
நாட்டகத் தோங்குசீர் ஞானசம் பந்தன
பாட்டகத் திவைவலார்க்கு இல்லையாம் பாவமே. 11 |
11.
பொ-ரை: சுடுகாட்டில் ஆடுகின்ற சிவபெருமான் விரும்பி
வீற்றிருந்தருளும் திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தை,
இளவரால் மீன்கள் துள்ளிப்பாயும் நீர்நிலைகளையுடைய
வளமையான சீகாழி என்னும் நகரில் அவதரித்த மிகுந்த புகழுடைய
ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத்தால் போற்ற வல்லவர்கட்குப்
பாவம் இல்லை. (அவர்கள் பாவத்திற்குக் காரணமான
தீவினைகளைலிருந்து நீங்கப் பெற்றவர்கள் ஆவர்.)
கு-ரை:
கோட்டகம்-நீர்நிலை. குதி-துள்ளல். முதனிலைத்
தொழிற் பெயர்.
|