3086. |
பாடினார் அருமறை பனிமதி சடைமிசைச் |
|
சூடினார்
படுதலை துன்எருக் கதனொடும்
நாடினார் இடுபலி நண்ணியோர் காலனைச்
சாடினார் வளநகர் சக்கரப் பள்ளியே. 2 |
2.
பொ-ரை: சிவபெருமான் அரிய நால்வேதங்களை ஓதி
அருளியவர். குளிர்ந்த சந்திரனைச் சடைமுடியில் சூடியவர்.
மண்டையோட்டு மாலையுடன் எருக்கம் பூவும் அணிந்தவர்.
திருக்கரத்தில் கபாலம் ஏந்திப் பிச்சை ஏற்றுத் திரிபவர். தம்மை
உறுதியாகப் பற்றி வழிபடும் மார்க்கண்டேயனின் உயிரைக்
கவரவந்த காலனைக் காலால் உதைத்தவர். அப்பெருமான்
வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சக்கரப்பள்ளி என்னும்
திருக்கோயிலை உடைய ஊராகும்.
கு-ரை:
மதியை வெள்ளியதலையோடும் எருக்கமாலையோடும்
சடைமிசைச் சூடினார். படுதலை, தலைமாலையாகக் குறித்தது.
துன் - நெருங்கிய. இடு பலி - (மாதர்) இடும் பிச்சையை; (நாடினர்.)
|