| 
         
          | 3088. | நலமலி கொள்கையார் நான்மறை பாடலார் |   
          |  | வலமலி 
            மழுவினார் மகிழும்ஊர் வண்டறை மலர்மலி சலமொடு வந்திழி காவிரி
 சலசல மணிகொழி சக்கரப் பள்ளியே.         4
 |  
      
             4. 
        பொ-ரை: சிவபெருமான் எல்லா உயிர்கட்கும் நன்மையே செய்யும் பெருங்கருணையாளர். நான்கு வேதங்களையும் அருளிச்
 செய்தவர். வலிமையுடைய மழுவைப் படைக்கலனாக ஏந்தியவர்.
 அப்பெருமான் மகிழ்ந்து வீற்றிருந்தருளும் ஊர், வண்டுகள்
 ஒலிக்கின்ற, தேன்துளிகளைக் கொண்ட மலர்கள் மணம் வீச,
 வேகமாகப் பாயும் காவிரியாறு சலசல என ஒலிக்கும், மணிகளைக்
 கரையிலே ஒதுக்கும் வளமுடைய திருச்சக்கரப்பள்ளி என்பதாகும்.
       கு-ரை: 
        வந்த இழி - வந்து பாய்கின்ற(காவிரி). சலசல என்னும் ஓசையோடு மாணிக்கங்களைக் கொழித்துவீசும் சக்கரப்பள்ளி.
 |