| 3089. |
வெந்தவெண் பொடியணி வேதியர் விரிபுனல் |
| |
அந்தமில் அணிமலை மங்கையோ டமரும்ஊர்
கந்தமார் மலரொடு காரகில் பல்மணி
சந்தினோடு அணைபுனற் சக்கரப் பள்ளியே. 5 |
5.
பொ-ரை: சிவபெருமான் வெந்த திருவெண்ணீற்றினை
அணிந்த வேதநாயகர். கங்கையைச் சடைமுடியில் தாங்கியவர்.
அவர் அழியா அழகுடைய மலைமங்கையான உமாதேவியோடு
வீற்றிருந்தருளும் ஊர், நறுமணம் கமழும் மலர், அகில், பலவகை
மணிகள், சந்தனமரம் இவை வந்தடைகின்ற நீர்வளமிக்க
திருச்சக்கரப் பள்ளி என்பதாகும்.
கு-ரை:
விரிபுனல் - பரவும் நீர்வளம் பொருந்திய. ஊர் -
வேதியர் மலைமங்கையோடு அமரும் ஊர் என்க. சந்து - சந்தன
மரம். அந்தம் இல்அணி -பேரழகு; அழியா அழகு எனலும் ஆம்.
அழியா அழகுடையான் என வருதலும் காண்க. (கம்பராமாயணம்.)
|