3098. |
அந்தணர் வேள்வியும் அருமறைத் துழனியும் |
|
செந்தமிழ்க் கீதமும் சீரினால் வளர்தரப் பந்தணை
மெல்விர லாளொடு பயில்விடம்
மந்தம்வந் துலவுசீர் மாமழ பாடியே. 3 |
3.
பொ-ரை: அந்தணர்கள் வேள்வி செய்யும்போது
கூறுகிறவேதங்கள் ஒலிக்கவும், செந்தமிழ்ப் பக்திப்பாடல்கள்
இசைக்கவும், சிறப்புடன், இறைவன், பந்து வந்தடைகின்ற
மென்மையான விரல்களையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும்
இடம், தென்றற் காற்று வீசும் புகழ்மிக்க திருமழபாடி என்னும்
திருத்தலமாகும்.
கு-ரை:
துழனி - ஓசை. செந்தமிழ்க்கீதம் - தனித் தமிழிசைப்
பாடல். சீர் -முறை, சிறப்பு, தாளஒத்து. வேள்விகள் முறையோடும்,
மறைத்துழனி சிறப்போடும், செந்தமிழ்க்கீதம், தாள ஒத்துக்களோடும்
விருத்தியடைய அம்பிகையோடும் இறைவன் பயிலும் இடம் என்பது
முதல் மூன்றடியின்பொருள். பயில்+இடம்=பயில்விடம்
-உடம்படுமெய்யல்லாத மெய். இறைவன் என்பது சொல் எச்சம்.
(பரிமேலழகர்).தோன்றா எழுவாய் எனினும் ஆம். மந்தம்
-தென்றற்காற்று, பண்பாகு பெயர்.
|